என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மன உளைச்சல்"
தேனி:
தேனி அருகே சின்னமனூர் சுக்காங்கல்பட்டியைச் சேர்ந்தவர் சுதாகரன் (வயது 42). இவருக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்தும் எதுவும் அமைய வில்லை. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த சுதாகரன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஏற்கனவே திருமண ஏக்கத்தில் இருந்த சுதாகரனுக்கு உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டது.
இதனால் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்தார். அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சுதாகரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் இசக்கிபாண்டி (வயது 47). இவர் தற்போது கோவையில் மனைவி மற்றும் 3 மகன்களுடன் வசித்து வருகிறார்.
இவரது 2-வது மகன் குமார் (18). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர் தனது உறவினர் பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தாராம். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இசக்கி பாண்டி தனது மகன் குமாருடன் பொங்கல் விடுமுறைக்காக சுந்தரபாண்டியபுரத்திற்கு வந்துள்ளார். காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்த குமார் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து இசக்கி பாண்டி களக்காடு போலீசில் புகார் செய்தார். களக்காடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் லக்கையன்பேட்டை அத்திக்கோம்பை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் பிரவீன்குமார் (வயது 27). இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா நகரில் தங்கி 3 நண்பர்களுடன் தினசரி வசூல் வட்டி, மாத வசூல் மற்றும் ஆட்டோ பைனான்ஸ் செய்து வந்தார்.
பிரவீன்குமாருக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.8 லட்சம் வசூலாகவில்லை. இதனால் நண்பர்களுக்கு என்ன பதில் கூறுவது என்று மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் பிரவீன்குமார் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெகுநேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பிரவீன்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து தாராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் செல்லையா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பிரவீன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்